| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கங்காதரமூர்த்தி (கங்காதரர்) |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a மணல் கல் |
| 500 | : | _ _ |a தன் புரிசடை ஒன்றில் கங்கையைத் தாங்கும் பெருமான் (கங்காதரர்) |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a பூமிக்கு பாய்ந்து வரும் கங்கையை தன் புரி சடை ஒன்றில் தாங்கும் கங்காதரர் வலது காலை ஊன்றி, இடதுகாலை உயர்த்தி பீடத்தில் நிறுத்தி திரிபங்க நிலையில் நின்றுள்ளார். இது தூக்கிய முழங்கால் என்ற அமைப்பாகும். (ஊர்த்துவஜானு) ஆறு திருக்கைகளில் வலது முன்கை கடக முத்திரையிலும், நடுக்கை கடியவலம்பிதமாக இடையில் வைத்தவாறும், இடது பின் கை விஸ்மய (விரல்களை விரித்து வியக்கும் முத்திரை) முத்திரையிலும் இடது முன் கை தன் சடை முடியிலிருந்து ஒற்றைப் புரியை நீட்டி அதில் கங்கைப் பெண்ணை தாங்கியவாறும் அமைந்துள்ளன. ஜடாமகுடம் அணிந்துள்ள இறைவன் வலதுபுறம் தலையைச் சாய்த்துள்ளார். நீள்காதுகளில் அணிகலன்கள் அணிந்துள்ளார். அரையாடை அணிந்துள்ள இறைவனின் அணிகலன்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. அருகில் நிற்கும் உமையாள் ஒயிலாக சாய்ந்த நிலையில் இக்காட்சியை காண்கிறார். தேவி தன் இடது கையை கடகமுத்திரையாகவும், வலது கையை கடி முத்திரையாக இடையில் வைத்தவாறும் உள்ளார். இடது காலை ஊன்றி, வலது முழங்காலை வளைத்தும் நிற்கிறார். கங்காதரரின் இடது மேற்புறம் பாய்ந்து வரும் கங்கை பெண் வடிவில் காட்டப்பட்டுள்ளாள். |
| 653 | : | _ _ |a கங்காதரர், கங்கையைத் தாங்கும் பெருமான், கங்காதர மூர்த்தி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி, கைலாசநாதர் கோயில் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 | : | _ _ |a 12.84226806 |
| 915 | : | _ _ |a 79.6897132 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000060 |
| barcode | : | TVA_SCL_000060 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |